பிரதமர் அலுவலகம்
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
12 FEB 2026 10:17AM by PIB Chennai
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். கல்வியை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். "சமூக சீர்திருத்தத்திற்கான அவரது சீரிய முயற்சிகள் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது" என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். கல்வியை ஊக்குவிப்பது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. சமூக சீர்திருத்தத்திற்கான அவரது சீரிய முயற்சிகள் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
***
(Release ID: 2226762)
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2227186)
आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam