பிரதமர் அலுவலகம்
மலேசியாவில் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2026 2:50PM by PIB Chennai
மலேசியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) கலந்துரையாடினார். பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டான் தெங்கு முகமது தௌஃபிக், பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுனவத்தின் நிறுவனர் டான் டத்தோ வின்சென்ட் டான் சீ யியோன், கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபைசல் வான் ஜாஹிர், ஃபிசன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் டத்தோ புவா கெய்ன் செங் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் வணிகத் தொடர்புகளையும், இந்திய வளர்ச்சியில் மலேசிய நிறுவனங்களின் வலுவான ஆர்வத்தையும் பிரதமர் பாராட்டினார். வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்கும் நிலையான, வணிகச் சூழலை உருவாக்குவதற்கும் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் குறிப்பிட்டார். இந்தியா வழங்கும் வாய்ப்புகளை, குறிப்பாக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை மலேசிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக். கொண்டார்.
இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை மலேசிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டினர். மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் வலுவான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்துவதன் மூலமும், கூட்டு முயற்சிகளை ஆராய்வதன் மூலமும் இந்தியாவில் தங்கள் வணிகத்தை அதிகரிப்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
***
(Release ID: 2225107)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225214)
வருகையாளர் எண்ணிக்கை : 9