பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

3-வது உலக பாதுகாப்பு கண்காட்சியில் இந்தியா பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 06 FEB 2026 12:50PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் சேத்2026 பிப்ரவரி 08–09 தேதிகளில் சவூதி அரேபியாவுக்கு செல்லும் உயர்மட்ட இந்தியக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்தக்குழு அங்கு நடைபெறும் உலக பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்கிறது.  இந்தக் கண்காட்சியில் 700 காட்சியாளர்கள் மற்றும் 400 அதிகாரப்பூர்வ  குழுக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அங்குஇந்திய அரங்கு  முதன்முறையாக 400 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்படுகிறது.  இதில் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை (டாங்கிகள்ஏவுகணைகள்ரேடார்வெடிபொருட்கள் போன்றவை) காட்சிப்படுத்தும்.

உலகப் பாதுகாப்பு கண்காட்சியில்  இந்தியா மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துறைகளுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். 

உலக பாதுகாப்பு கண்காட்சி இரு ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும்இது இந்திய பாதுகாப்புத் தொழில்துறைக்கு உலகளாவிய தொடர்பையும்.  புதிய கூட்டாண்மைகளை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224333&reg=3&lang=1

***

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2224621) आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Malayalam