தேர்தல் ஆணையம்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பணியமர்த்தப்பட உள்ள மத்திய பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் செல்முறை விளக்கம் அளித்துள்ளது.
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 2:58PM by PIB Chennai
தமிழ்நாடு, புதுச்சேர, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் மத்திய பார்வையாளர்களாகப் பணியாற்றும் பொது, காவல்துறை மற்றும் செலவினப் பார்வையாளர்களுக்கான விளக்கக் கூட்டங்களைத் தேர்தல் ஆணையம் நடத்தியது.
விளக்கக் கூட்டங்களுக்கு 714 பொதுப் பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவினப் பார்வையாளர்கள் உட்பட 1,444 அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். விளக்கக் கூட்டங்கள் புது தில்லியில் இரண்டு நாட்களில் அதாவது பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் மூன்று அமர்வுகளாக நடைபெறுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் கலங்கரை விளக்கங்களாக பணியாற்ற அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பார்வையாளர்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்தல்கள் நடைபெறும் 824 தொகுதிகளிலும் அவர்களின் இருப்பு முழு தேர்தல் எந்திரத்தையும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அமர்வுகளின் போது, ஐடி பயன்பாடுகள், தளங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.
ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பதால், மத்திய பார்வையாளர்கள் அனைத்து தேர்தல் சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல்கள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் கடுமையான, பாரபட்சமற்ற இணக்கத்தை உறுதி செய்ய ஆணையத்திற்கு நேரடியாக உள்ளீடுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பார்வையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் முழுமையாக அணுகக்கூடியவர்களாக இருக்கவும், வாக்காளர்களின் குறைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படவும் அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்காளர்களின் வசதிக்காக ஆணையம் சமீபத்தில் எடுத்த முயற்சிகள், குறிப்பாக குறைந்தபட்ச வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதை உறுதிசெய்து, வாக்குச் சாவடிகளைப் பார்வையிடவும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசியல் சட்டத்தின் பிரிவு 324, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 20B ஆகியவற்றால் வழங்கப்பட்ட முழுமையான அதிகாரங்களின் கீழ், ஆணையம் மத்திய பார்வையாளர்களை நியமிக்கிறது. இதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் ஆணையத்திற்கு அவர்கள் உதவ முடியும். கள அளவில் தேர்தல் நடைமுறையின் திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தையும் அவர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223728®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224106)
வருகையாளர் எண்ணிக்கை : 16