எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணு மின் நிலையங்களை அமைக்க தேசிய அனல் மின் கழகம் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 1:39PM by PIB Chennai

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம், 2047-ம் ஆண்டுக்குள் 30 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடையத் திட்டமிட்டுள்ளது.

2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அடைய வேண்டும் என்ற முடிவின் ஒரு பகுதியாக இந்த 30 ஜிகாவாட் இலக்கு உள்ளது.

சர்வதேசப்  பங்கேற்பாளர்களுடன் பல்வேறு விருப்பங்கள் மற்றும் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக, தேசிய அனல் மின் கழகம் ஓர் ஆர்வ வெளிப்பாட்டை  அறிவித்துள்ளது.

மேலும், தேசிய அனல் மின் கழகம், ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் மஹி பன்ஸ்வாராவில் உள்ள ஜேவி அஸ்வினி மூலம் 4×700 மெகாவாட் அணுமின் திட்டத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய கணிப்பு,  2032-33 நிதியாண்டில், முதல் 700 மெகாவாட் ஆரம்ப சோதனையை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தகவலை, மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

(Release ID: 2223660)

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224055) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Telugu