சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிரிடப்படும் மூலிகைத் தாவர வகைகளின் பூர்வீக சான்றிதழை வழங்குவதற்கான டிஜிட்டல் இணையதளம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 9:07AM by PIB Chennai

பயிரிடும் மூலிகை தாவர வகைகளின் பூர்வீகம் குறித்த மின்னணு முறையிலான சான்றிதழை வழங்கும் வகையில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பல்லுயிர் ஆணையம் இந்த இணையதளத்ததை வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக மூலிகை தாவரங்களின் பூர்வீகம் குறித்த சான்றிதழைப் பெற்று பயனடைய வகை செய்கிறது.

ஒற்றைச் சாளர முறையில் செயல்படுத்தப்படும் இந்த சான்றிதழ் நடைமுறைகளில் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழைப் பெறுவதற்கு https://absefiling.nbaindia.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். உயிரியல் பன்முகத்தன்மை திருத்தச்சட்டம் 2023,  ஜூலை 25 2023 அன்று மக்களவையிலும் 2023 ஆகஸ்ட் 1 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

ஆயுஷ் துறைவிதை உற்பத்தித்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உயிரியல் பன்முகத்தன்மை விதிகளும் 2025-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விதிகள் டிஜிட்டல் தளத்தின் மூலம் பயிரிடப்படும் மூலிகைத் தாவரங்களின் பூர்வீக சான்றிதழை   மின்னணு முறையில் உருவாக்க வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223522&reg=3&lang=1

***

TV/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2223966) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu