ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026–27 மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டு ரயில்வே உட்கட்டமைப்பிற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு 9 மடங்கு உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 7:31PM by PIB Chennai

மத்திய பட்ஜெட்டின் கீழ், நாடு முழுவதும் ரயில்வே மேம்பாடு  ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது. வலிமையான இணைப்பு, மேம்படுத்தப்பட்ட பயணிகள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் மற்றும் சரக்கு வலையமைப்புகளின் விரிவாக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மாநிலங்களுக்கு சாதனை அளவிலான ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அந்த வகையில் தமிழ்நாடு அதன் ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. 2009–14ல் ₹879 கோடியாக இருந்த மாநிலத்திற்கான வருடாந்திர ஆண்டு சராசரி பட்ஜெட் 2026–27ல் 9 மடங்கு உயர்ந்து ₹7,611 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கணிசமான முதலீட்டின் மூலம் மொத்தம் ₹35,701 கோடி மதிப்புள்ள தற்போதைய திட்டங்கள் வெகுவாகப் பயனடையும்.

 

தென்னிந்தியாவில், மாநில வாரியான ரயில்வே ஒதுக்கீடுகள், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் அருகிலுள்ள நகர்ப்புற மையங்களை இணைக்கும் வளர்ந்து வரும் அதிவேக ரயில் திட்டம்பயணிகள் இணைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வலையமைப்பு, தெற்கின் முக்கிய பொருளாதார இயந்திரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதுடன், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைகள் வழித்தடங்களில் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்தும்.

 

அதிவேக வழித்தடம் நிறைவடைந்த பிறகு, சென்னை-பெங்களூரு இடையேயான பயணம் சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகவும், பெங்களூரு-ஹைதராபாத் பயணம் சுமார் 2 மணி நேரமாகவும், சென்னை-ஹைதராபாத் இடையேயான பயணம் சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகவும் குறையும். இந்த வலையமைப்பு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம்  ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு சக்திவாய்ந்த வளர்ச்சி பெருக்கியாக செயல்படுவதுடன், பிராந்திய வளர்ச்சியையும் கணிசமாக அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222767&reg=3&lang=1

 

***

 

TV/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222981) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu , Kannada , Malayalam