ரெயில்வே அமைச்சகம்
புல்லட் ரயில் திட்டத்திற்காக மகாராஷ்டிராவில் இரண்டாவது மலையை துளையிடும் பணி வெற்றிகரமாக நிறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 5:34PM by PIB Chennai
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது மலையை துளையிட்டு அகழ்ந்தெடுக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 454 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சுரங்கப்பாதை, இருவழிப் போக்குவரத்துக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பால்கர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் எட்டப்பட்ட இரண்டாவது பெரிய மைல்கல் சாதனை இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி 2-ம் தேதி சபாலே அருகே உள்ள எம்டி 5 சுரங்கப்பாதை முடிக்கப்பட்டது. இந்த எம்டி 6 சுரங்கப்பாதையானது, 'புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறை' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, துளையிடுதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு முறைகள் மூலம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையைப் பாராட்டிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் மாநிலப் பகுதியில் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும், 2028-ல் தானே வரையிலும், 2029-ல் மும்பை வரையிலும் இத்திட்டம் முழுமையாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். பால்கர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 7 மலைச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222666®=3&lang=1
வெளியிட்டு எண்:2222666
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222891)
வருகையாளர் எண்ணிக்கை : 9