பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சமூக மேம்பாட்டுக் குழுவின் 64-வது அமர்வில் மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 2:54AM by PIB Chennai

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் சமூக மேம்பாட்டுக் குழுவின் 64-வது அமர்வு நடைபெற்றது.  இதில் பங்கேற்ற மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் உரிமைகள் அடிப்படையிலான சமூக மேம்பாட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தினார்கள். இந்தியாவின் அறிக்கையை வாசித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், இந்தியாவின் சமூக நீதி  மற்றும் சமூக பாதுகாப்பு அரசியலமைப்பு சாசன உத்தரவாதங்களில் வேரூன்றி உள்ளதாகவும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற நாட்டின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒத்துப் போவதாகவும் தெரிவித்தார்.

ஒருவரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் முழு அரசு மற்றும் சமூக அணுகுமுறையை பிரதிபலிக்கும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற வழிகாட்டிக் கொள்கைளை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரகப் பகுதிகளில் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேம்படுத்துவதன் மூலம் கல்வியில் மாணவிகள், மற்றும் மாணவர்கள் பங்கேற்பில் சமத்துவம்,

மகளிர் மற்றும் பாதிக்கப்படக் கூடிய சமூகத்தினருக்காக குழாய் மூலம் குடிநீர், தூய்மைமிக்க சமையல் எரிசக்தி, தூய்மை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளின் விரிவாக்கம்,

உதவி தொலைபேசி எண்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக தேசிய அளவிலான பாதுகாப்பு மற்றும் ஆதரவு, விரிவான மகப்பேறு, குழந்தை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள், 100 மில்லியனுக்கு  அதிகமான பயனாளிகளை சென்றடைந்துள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் இலக்குமிக்கத் திட்டங்கள் ஆகிய இந்தியாவின் முன்முயற்சிகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222398&reg=3&lang=1  

---

TV/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222600) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam