தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வு காண்பது குறித்த விவாதம் - செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சிமாநாடு

प्रविष्टि तिथि: 30 JAN 2026 4:18PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கம் குறித்த உச்சிமாநாடு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தத் துறைச் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடிப்படையில் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும் இந்தியாவில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக வேவ்ஸ் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான பார்வையாளர்களிடையே காட்சிப்படுத்த வகை செய்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220849&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2221067) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada