நிதி அமைச்சகம்
உத்திசார் தன்னிறைவு மற்றும் திட்டமிட்ட சுதேசி முறை பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2026 1:38PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்த 'திட்டமிட்ட சுதேசி' கொள்கை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளுக்கு இடையே, இந்தியா வெறும் இறக்குமதியை மட்டும் செய்யாமல், மூன்று அடுக்கு உத்திசார் கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும் என ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. இதன்படி, மிக முக்கியமான தேவைகள், பொருளாதார ரீதியாகச் சாத்தியமான திறன்கள் மற்றும் குறைந்த முன்னுரிமை கொண்ட அம்சங்கள் என வகைப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.
வெறும் பாதுகாப்புவாதமாக இல்லாமல், உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதி நோக்குடன் கூடிய சுதேசி முறையே நாட்டை வலுப்படுத்தும். 'தேசிய உள்ளீட்டுச் செலவு குறைப்பு உத்தி' வாயிலாக உற்பத்திச் செலவைக் குறைத்து, இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும். உலகம் 'இந்தியப் பொருட்களை வாங்குவதைப் பற்றி சிந்திப்பதில்' இருந்து மாறி, 'தயக்கமின்றி இந்தியப் பொருட்களை வாங்கும்' நிலையை அடைய வேண்டும் என்பதே இந்த ஆய்வறிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
***
(Release ID: 2219920)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220773)
வருகையாளர் எண்ணிக்கை : 19