நிதி அமைச்சகம்
இந்தியாவில் வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி இருமடங்கு அதிகரித்துள்ளது – பொருளாதார ஆய்வறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2026 2:04PM by PIB Chennai
இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகள் பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் சிறப்பாக இருந்ததாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் 2025-ம் ஆண்டக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று சமர்ப்பித்தார். உலக அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு நிலையான வளர்ச்சிக் கண்டு வருவதாகவும், வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி இருமடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக அளவிலான வர்த்தக புள்ளியியல் தரவுகளின்படி, 2005 முதல் 2024-ம் ஆண்டுகளுக்கு இடையே நாட்டின் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி ஒரு சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலக அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதுடன் பல்வேறு துறைகளில் நாடுகளிடையே ஒத்துழைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. வளரும் நாடுகளில் வர்த்தக ரீதியிலான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு கடந்த 2025-ம் நிதியாண்டில் 825.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது ஆண்டுதோறும் 6.1 சதவீத வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219966®=3&lang=1
**
TV/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220688)
வருகையாளர் எண்ணிக்கை : 25