நிதி அமைச்சகம்
நாட்டின் தொழில்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைந்துள்ளன: பொருளாதார ஆய்வறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
29 JAN 2026 2:08PM by PIB Chennai
நாட்டின் தொழில்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் அமைந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (29.01.2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உற்பத்தியில் 35.4 சதவீதமும், ஏற்றுமதியில் சுமார் 48.58 சதவீதமும், இந்த துறையின் பங்கு உள்ளது என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. 32.82 கோடிக்கும் அதிகமானோர் இத்துறையில் பணிபுரிவதாகவும் இதில் 7.47 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய துறையாக இந்தத் துறை உள்ளது.
சமீப காலங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்கள் அதிகரித்துள்ளதாகவும் அரசின் நடவடிக்கைகளால் இத்துறை வலுப்பெற்றுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2026-ம் நிதியாண்டின் முதல் பாதியில் தொழில்துறை கடன் வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் முதன்மையான உந்து சக்தியாக இருந்ததாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219984®=3&lang=1
***
(Release ID: 2219984)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220687)
வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam