நிதி அமைச்சகம்
இந்தியாவில் சேவைத்துறையின் ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது – பொருளாதார ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:07PM by PIB Chennai
இந்தியாவில் சேவைத்துறையின் ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய கால கட்டத்தில் (2016 நிதியாண்டு முதல் 2017 நிதியாண்டு வரை) 7.6 சதவீதமாக இருந்த சேவைகள் துறையின் ஏற்றுமதி 2023 முதல் 2025-ம் நிதியாண்டு வரை 14 சதவீதாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
2026-ம் நிதியாண்டில் சேவைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்க நடவடிக்கைகள் காரணமாக ஒட்டுமொத்த கூட்டு வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது. ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கடல்சார் வர்த்தகம், தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219981®=3&lang=1
**
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220513)
आगंतुक पटल : 8