பிரதமர் அலுவலகம்
2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 11:52AM by PIB Chennai
2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் மையமாகவும், நம்பிக்கையுடனும் இந்த ஆண்டை மிகவும் நேர்மறையுடன் இந்தியா தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இந்திய இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லட்சியமிக்க இந்தியாவுக்கானது என்றும், ஆர்வமுடைய இளைஞர்களுக்கானது என்றும், தற்சார்பு இந்தியாவுக்கானது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்த இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை பிரதமர் உறுதியுடன் வெளிப்படுத்தினார். அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அன்னை என்று அழைக்கப்படும் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் ஒரு விரிவான சந்தை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அங்கு குறைவான விலையில் சென்றடையும் என்றும் உற்பத்தியாளர்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார். தொழில்துறை தலைவர்களும், உற்பத்தியாளர்களும் அலட்சியமாக இருக்க கூடாது என்று எச்சரித்த அவர், தரத்தில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார். சிறந்த தரமான தயாரிப்புகளுடன் இந்த வெளிப்படையான சந்தையில் நுழைவது என்பது 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த வாங்குவோரிடமிருந்து லாபத்தை ஈட்டுவது மட்டுமின்றி, அவர்களுடைய மனங்களை வெல்வதும், பல ஆண்டுகளுக்கு நீண்டகால தாக்கதை ஏற்படுத்துவதுமாகும் என்று கூறினார். நாட்டின் நற்பெயருடன் இணைந்து நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகளும் புதிய கௌரவத்தை பெறும் என்றும் கூறினார். 27 நாடுகளுடனான இந்த ஒப்பந்தம் இந்திய மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிப்பதாக சுட்டிக்காட்டிய திரு மோடி, உலகளாவிய வாய்ப்புகளை ஆராய ஆர்வமுள்ள சேவைத் துறையினருக்கு மகத்தான வாய்ப்புகளை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தன்னம்பிக்கை, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தி திறன் மிக்க இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க படி என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219910®=3&lang=1
**
TV/IR/RK/EA
(रिलीज़ आईडी: 2220162)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Kannada
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Manipuri
,
Gujarati
,
Telugu