பிரதமர் அலுவலகம்
கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
28 JAN 2026 2:25PM by PIB Chennai
கேரளாவில் ஆர்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவருடனும் இணைவது தமக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறினார். ஆயுர்வேதத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளில் ஆர்ய வைத்தியசாலை மகத்துவமான பங்களிப்பை செய்ததாக தெரிவித்தார். தமது 125 ஆண்டுகால பயணத்தில் ஆயுர்வேதத்தை சக்திமிக்க சிகிச்சை முறையாக இந்நிறுவனம் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஆர்ய வைத்தியசாலை நிறுவனர் வைத்யரத்னம் பிஎஸ் வாரியரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், ஆயுர்வேதத்தில் அவரது அணுகுமுறை, மக்களின் நலனை அவருடைய அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் சிகிச்சை அளிக்கும் பாரம்பரியத்தின் வாழும் அடையாளமாக கேரளாவின் ஆர்ய வைத்தியசாலை உள்ளதாகவும், நூற்றாண்டாக மனித சமூகத்திற்கு சேவையாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஆயுர்வேதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது ஒரு பிராந்தியத்திற்கோ உட்பட்டது அல்ல என்று தெரிவித்தார். இது அனைத்து காலத்திற்குமானது என்று அவர் கூறினார். இந்தப் பழமையான மருத்துவமுறை வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கான வழிவகைகளையும் சமநிலையை உருவாக்கவும் இயற்கையுடன் இணைந்து வாழவும் வழிகாட்டியது என்று அவர் தெரிவித்தார். தற்போது 600-க்கும் அதிகமான ஆயுர்வேத மருந்துகளை ஆர்ய வைத்தியசாலை உற்பத்தி செய்வதாக குறிப்பிட்ட பிரதமர், உலகம் முழுவதும் 60-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் ஆயுர்வேத முறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறினார்.
ஆர்ய வைத்தியசாலைக்கு சேவை என்பது வெறும் சிந்தனை அல்ல என்றும் ஆனால் அதனுடைய உணர்வு செயல்கள், அணுகுமுறை மற்றும் நிறுவனங்களில் பிரதிபலித்ததாக தெரிவித்தார். இந்நிறுவனத்தின் அறக்கட்டளை மருத்துவமனை கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அறக்கட்டளை மருத்துவமனையின் பயணம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து வைத்தியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தமது வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219557®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2219782)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam