உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 28 JAN 2026 1:04PM by PIB Chennai

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மகாராஷ்டிராவின் அனைத்து சமூகப் பிரிவினரின் நலனுக்காக அஜித் பவார் தம்மையே அர்ப்பணித்த குணம் வார்த்தைகளால்  வெளிப்படுத்த இயலாது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது, “மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மூத்த தலைவருமான அஜித் பவார் மறைந்த செய்தி, இன்று என் மனதை மிகவும் துயரப்படுத்தியது. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மகாராஷ்டிராவின் அனைத்து சமூகப் பிரிவினரின் நலனுக்காக அஜித் பவார் தம்மையே அர்ப்பணித்த குணம் வார்த்தைகளால்  வெளிப்படுத்த இயலாது.  அவரது மறைவு தேசிய ஜனநாயக கூட்டணியின்  குடும்பத்தினருக்கு   இழப்பு மட்டுமின்றி, எனக்கும் இழப்பாகும். பவார் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான தருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு உறுதுணையாக உள்ளது. அவரது ஆன்மாவுக்கு இறைவன் தமது திருவடியில் இடமளிக்கட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி”.

----

(Release ID: 2219516)

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2219646) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam