பிரதமர் அலுவலகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 JAN 2026 8:19AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு தினத்தை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக உள்ள குடியரசு தினம், அனைத்து மக்களின் வாழ்விலும் புதிய ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நல்ல நாளில், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, மேலும் வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். இந்த தினம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், நம் அனைவரின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் சேர்க்கட்டும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218695®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2218775)
आगंतुक पटल : 7