பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்புத் திருவிழாவில் தமது உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JAN 2026 7:01PM by PIB Chennai
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் ஒரு சில முக்கியப் பகுதிகளை அவர் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சி. இப்போது, அனிமேஷன், டிஜிட்டல் மீடியா போன்ற பல துறைகளில் இந்தியா உலகளாவிய மையமாக மாறி வருகிறது. இவற்றில் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்."
"உற்பத்தி, மின்னணுவியல், வாகனம், மருந்து போன்ற துறைகளில் இந்தியா ஒரு சிறந்த மையமாக மாறி வருவதால், இந்தியா மீது உலகின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவை இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன."
"தற்போது மேற்கொள்ளப்படும் தொடர் சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பெரிதும் பயனளித்து வருகிறது."
***
(Release ID: 2218236)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2218311)
வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam