உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஜனவரி 24 அன்று நடைபெறும் ‘உத்தரப்பிரதேச தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார்

प्रविष्टि तिथि: 22 JAN 2026 3:51PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஜனவரி 24 சனிக்கிழமை அன்று நடைபெறும் 'உத்தரப்பிரதேச தின' கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

லக்னோவில் உள்ள தேசிய உத்வேகத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 'ஒரு மாவட்டம் ஒரு உணவு வகை' என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் அடையாளம் காணப்பட்டு, தர மேம்பாடு, வணிகக் குறியீடு மற்றும் சந்தை அணுகலுடன் இணைக்கப்படும். இதனால் உள்ளூர் உணவுகள் பிராந்திய ரீதியாக மட்டுமின்றி தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெறும்.

'உத்தரப்பிரதேச தின' கொண்டாட்டங்களின் போது, சர்தார் படேல் தொழில்துறை மண்டல திட்டத்தையும் திரு அமித் ஷா தொடங்கி வைப்பார். உத்தரப்பிரதேச அரசின் முதல்வர் யுவ (முதலமைச்சரின் இளையோர் தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்டங்களுக்கான  விருதுகளையும்  2025–26-ம் ஆண்டுக்கான உத்தரப்பிரதேச கௌரவ சம்மான் விருதையும் அவர் வழங்குவார்.

***

AD/SMB/SE


(रिलीज़ आईडी: 2217379) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada