உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கீதா பதிப்பகத்தின் வெளியீடான ‘கல்யாண்’-இன் நூற்றாண்டு இதழின் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 21 JAN 2026 7:39PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இன்று நடைபெற்ற கீதா பதிப்பகத்தின் மாத இதழான 'கல்யாண்'-இன் நூற்றாண்டு பதிப்பின் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர்  திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்வில், மாநில முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

‘கல்யாண்’ இதழ் தொடங்கப்பட்டபோது, ​​இதில் விளம்பரங்களை ஒருபோதும் வெளியிடக்கூடாது என்று மகாத்மா காந்தி அறிவுறுத்தியதாகவும், இன்றுவரை ‘கல்யாண்’ ஒரு விளம்பரத்தை கூட வெளியிடவில்லை என்றும் தமது உரையின்போது  திரு அமித் ஷா கூறினார். ஆன்மீக புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் சந்தை அழுத்தங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் கீதட்டுக் கொண்டார்.  கீதை பதிப்பகம் பரந்த அளவிலான இலக்கியங்களை உருவாக்கியுள்ளது என்றும், இது நாட்டில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் திரு ஷா கூறினார். எண்ணற்ற துறவிகளின் அயராத முயற்சிகளை கீதை பதிப்பகம் எடுத்துரைத்து, மக்கள் அணுகுவதற்கு வழிவகை செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இதன் விளைவாக, சனாதன தர்மத்தின் மீதான ஈர்ப்பு வலுவடைவதையும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும், இந்திய கலாச்சாரத்தின் மீது உறுதியான நம்பிக்கையையும் நாம் மீண்டும் காண்கிறோம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாட்டின் கொள்கைகளை மையமாகக் கொண்டு இந்திய கலாச்சாரத்தின் சித்தாந்த வலிமையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217042&reg=3&lang=1           

---

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2217130) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada