உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஸ் பிஹாரி போஸின் நினைவுத் தினத்தையொட்டி மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 21 JAN 2026 12:58PM by PIB Chennai

தாய்த் திருநாட்டின் துணிச்சல்மிக்க புதல்வரான ராஸ் பிஹாரி போஸின் நினைவு தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, கதர் இயக்கம் முதல் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது வரை, ராஸ் பிஹாரி போஸ் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு புதிய திசையை காட்டினார் என்று கூறியுள்ளார். இந்திய சுதந்திர லீக் மூலம் வெளிநாடுகளில் இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவையும், வளங்களையும் திரட்டியதன் மூலம் சுதந்திரத்திற்கான போராட்டத்தை அவர் மேலும் விரிவுபடுத்தினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

***

(Release ID 2216774)

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2216926) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam