ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வழித்தட நவீனமயமாக்கலிலும் பாதுகாப்பிலும் ரயில்வே சாதனை

प्रविष्टि तिथि: 18 JAN 2026 2:39PM by PIB Chennai

கடந்த 11 ஆண்டுகளில் நிலையான முதலீட்டின் மூலம் ரயில்வே அதன் தண்டவாள உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த முயற்சிகள் நாடு முழுவதும் பாதுகாப்பான, வேகமான, நம்பகமான ரயில் போக்குவரத்துக்கு பங்களித்துள்ளன.

2024–25-ம் நிதியாண்டில், ரயில்வே 6,851 கிலோமீட்டருக்கு தண்டவாளப் புதுப்பிப்பை மேற்கொண்டது. நடப்பு நிதியாண்டான 2025–26-ல், 7,500க்கும் மேற்பட்ட தண்டவாளப் புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தண்டவாள நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், பயணத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அவசியமான சரிபார்ப்புப் பணிகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடைகள் மோதுதல், அத்துமீறல் சம்பவங்கள் ஆகியவற்றைக் குறைக்க, ரயில் பாதைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 15,000 கிலோமீட்டர் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 110 கிமீ வேகத்திற்கு மேல் ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்த வழிவகுத்துள்ளது.

இந்த தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, ரயில்வேத் துறை தண்டவாளங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215807&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215869) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam