பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் சில பகுதிகளை அவர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 JAN 2026 7:14PM by PIB Chennai

தேசிய புத்தொழில் நிறுவன தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்டார்ட்அப்  இந்தியா முன்முயற்சியின் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சில பகுதிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில், திரு மோடி குறிப்பிட்டதாவது:

"இன்று, நாம் ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் 10 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். புத்தொழில் நிறுவனங்களின் உலகில், கடந்த தசாப்தத்தில் இந்த சூழலியல் எவ்வாறு புதுமை மற்றும் வளர்ச்சியை இயக்குகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் பல சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

"ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் 10 ஆண்டுகள், நீண்டகால மனநிலையை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது, கிராமப்புற இளைஞர்கள் கூட தங்கள் கனவுகளைத் தொடரவும், நனவாக்கவும் உதவுகிறது.”

“ஸ்டார்ட்அப் இந்தியா என்பது பல்வேறு துறைகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த தளமாகும்.”

"அடுத்த பத்து ஆண்டுகளில், புத்தொழில் நிறுவனங்களின் உலகில் நடந்து வரும் வேகத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள். இதன் மூலம் இந்தியா வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் உலகை வழிநடத்தும்.”

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2215503) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu , Malayalam