பிரதமர் அலுவலகம்
தேசிய புத்தொழில் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
தேசிய புத்தொழில் தினத்தில் இந்திய இளைஞர்களின் உணர்வைப் பாராட்டும் வகையிலான சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 9:28AM by PIB Chennai
தேசிய புத்தொழில் தினத்தை முன்னிட்டு, புத்தொழில் உலகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியாவின் எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்த மக்களின், குறிப்பாக இளைஞர்களின், துணிச்சல், புதுமை உணர்வு, தொழில்முனைவோர் ஆர்வம் ஆகியவற்றை இந்த நாள் கொண்டாடுகிறது என்று பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
மாற்றத்தை ஏற்படுத்துவதில் புத்தொழில்களின் பங்கை எடுத்துரைத்து, திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
"புத்தொழில்கள் நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மாற்றத்தின் இயந்திரங்கள். நமது பூமி எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதிலும், அதே நேரத்தில் மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அவை சிறப்பான பணிகளைச் செய்கின்றன. பெரிய கனவுகளை நனவாக்கத் துணிந்து, வழக்கமான தடைகளைக் கடந்து, ஆபத்துக்களை எதிர்த்து, தங்கள் புத்தொழில்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை உருவாக்கிய ஒவ்வொரு நபரை நினைத்தும் நான் பெருமைப்படுகிறேன்."
புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவால் தொடங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் புத்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஆபத்துக்களை தகர்த்து, பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக மாற விரும்பும் இளைஞர்களை ஆதரிப்பதில் அரசின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டுபவர்கள், தொழில் பாதுகாப்பகத்தினர், முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள், புத்தொழில்களை ஆதரிக்கும் பிறர் என பரந்த சூழல் அமைப்பையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதிலும், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் அவர்களின் வழிகாட்டுதலும் நுண்ணறிவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள் புதுமை, மீட்சித்தன்மை, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றின் உந்து சக்திகளாக இருப்பதாக பிரதமர் தெரிவித்திள்ளர்.
சமஸ்கிருத ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவின் இளம் தொழில்முனைவோரின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இடைவிடாத முயற்சிகள் புத்தொழில் உலகில் புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அவர்களின் ஆற்றலும் ஆர்வமும் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“தேசிய புத்தொழில் தினத்தை முன்னிட்டு புத்தொழில் உலகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ஸ்டார்ட்அப் இந்தியா தொடங்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதால் இன்றைய நாள் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள், உலகளாவிய புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியாவின் எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்த நமது மக்களின், குறிப்பாக நமது இளைஞர்களின் துணிச்சல், புதுமை உணர்வு மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்தைக் கொண்டாடுகிறது.
#10YearsOfStartupIndia
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2214764®=3&lang=1”
"புத்தொழில்கள் நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இயந்திரங்கள். நமது பூமி எதிர்கொள்ளும் சவால்களை திறம்பட கையாளுவதிலும், அதே நேரத்தில் மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அவை சிறந்த பணிகளைச் செய்கின்றன. பெரிய கனவுகளைக் காணத் துணிந்து, ஆபத்துக்களைத் தகர்த்து, புத்தொழில்கள் மூலம் தாக்கத்தை உருவாக்கிய ஒவ்வொரு நபரைப் பற்றியும் நான் பெருமைப்படுகிறேன்.
#10YearsOfStartupIndia”
"இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியா மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களால், முன்பு நினைத்துப் பார்க்க முடியாத துறைகளான, விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் புத்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதில் புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். ஆபத்துக்களை தகர்த்து பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக மாற விரும்பும் இளைஞர்களை ஆதரிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது
#10YearsOfStartupIndia”
"இன்றைய நாள், வழிகாட்டிகள், தொழில் பாதுகாப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள், புத்தொழில்களை ஆதரிக்கும் பிறர் என இந்தச் சூழல் அமைப்பை அங்கீகரிக்கும் ஒரு நாளாகும். நமது இளைஞர்கள் புதுமைகளை உருவாக்கி வளர்ச்சிக்கு பங்களிக்கும்போது அவர்களின் ஆதரவும் நுண்ணறிவும் முக்கியமானது.
#10YearsOfStartupIndia”
"நமது இளைஞர்கள் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் புத்தொழில் உலகில் புதிய பாதையை அமைத்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமும் ஆர்வமும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215136®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215229)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam