உள்துறை அமைச்சகம்
புனித உத்தராயணத்தின் துவக்கத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்
प्रविष्टि तिथि:
14 JAN 2026 6:23PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புனித உத்தராயண காலத்தின் துவக்கத்தை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து, கோமாதாவை வழிபட்டார். உள்துறை அமைச்சர், அகமதாபாத்தில் உள்ள தல்தேஜில் உள்ள குருத்வாரா கோவிந்த் தாமிலும் வழிபாடு நடத்தினார். உத்தராயணத்தையொட்டி தனது மக்களவைத் தொகுதியான நாரன்புரா வார்டு மற்றும் (அக்பர்நகர் & அபிஷேக் அபார்ட்மென்ட்) நவ வதாஜ் வார்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் விழாவிலும் அவர் பங்கேற்றார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவுகளில் திரு அமித் ஷா குறிப்பிட்டதாவது: “ஜெய் ஜெகந்நாத்! ஒவ்வொரு வருடத்தையும் போலவே, இந்த ஆண்டும் உத்தராயணத்தின் புனிதமான சந்தர்ப்பத்தில் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் பிரார்த்தனை செய்யும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. மகாபிரபுவின் அருள் எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும்.”
"சனாதன தர்மத்தின்படி, கோமாதாவுக்கு சேவை செய்வதும் வழிபடுவதும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று, உத்தராயணத்தை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் கோமாதாவை வழிபட்டேன்."
"குஜராத் முழுவதும் உத்தராயணப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இன்று, அகமதாபாத்தின் நாரன்புரா வார்டில் உள்ள அர்ஜுன் கிரீன் பிளாட்ஸில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் விழாவில் பங்கேற்று காற்றாடிகளை பறக்கவிட்டேன்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214651®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2214757)
आगंतुक पटल : 7