பிரதமர் அலுவலகம்
ஒன்பது புதிய அமிர்த பாரத் விரைவு ரயில்கள் குறித்த அறிவிப்பிற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
14 JAN 2026 6:51PM by PIB Chennai
நாடு முழுவதும் பயணிகளின் வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் புதிய அமிர்த பாரத் ரயில்கள் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பல்வேறு வழித்தடங்களில் ஒன்பது புதிய அமிர்த பாரத் விரைவு ரயில்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படவிருப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் வெளியிட்டிருந்ததற்கு பதிலளித்த பிரதமர், இந்த முயற்சியின் பரந்த நன்மைகளைக் குறிப்பிட்டார்.
புதிய அமிர்த பாரத் ரயில்கள், பயணிகளின் அனுபவம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் என்று பிரதமர் கூறினார்.
நாடு முழுவதும் நவீன பயணியர் ரயில்களின் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஒன்பது புதிய அமிர்த பாரத் விரைவு ரயில்கள் விரைவில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் அறிவித்தார்.
புதிய சேவைகள், அசாமை ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்துடன் இணைக்கும், அதே நேரத்தில் பல வழித்தடங்கள் மேற்கு வங்கத்தை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, புது தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்துடன் இணைக்கும். இது இந்தியாவின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பை கணிசமாக வலுப்படுத்தும்.
தொடர் பதிவுகளுக்குப் பதிலளித்து, திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது:
"புதிய அமிர்த பாரத் ரயில்கள் பயணிகளின் வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கின்றன. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவும் மேம்படுத்தப்படும்!"
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2214752)
आगंतुक पटल : 7