இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் விளையாட்டுகளில் மேக் இன் இந்தியா, சர்வதேச தொடர்புகள் குறித்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
13 JAN 2026 10:32AM by PIB Chennai
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் அதன் தொடர்புடைய அமைப்புகளில், விளையாட்டுகளில் மேக் இன் இந்தியா மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விளையாட்டுகளில் இந்தியாவின் சர்வதேச ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு போட்டி விதிமுறைகள் மற்றும் அமைப்புகளில் மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள், தேர்தல்கள், விளையாட்டு வீரர்கள் தொடர்புடைய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் கண்டங்கள் அளவிலான கூட்டமைப்புகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச உறவுகள் குழு கண்காணிக்கும்.
அத்துடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கூட்டுப்பயிற்சி முகாம்கள், பரிமாற்றத் திட்டங்கள், அறிவுசார் பரிமாற்ற முன்முயற்சிகள், இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக இடைக்கால சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தை இக் குழு உருவாக்கும்.
அனைத்து சர்வதேச நிகழ்வுகளும் இந்திய அரசின் கொள்கைகள், ஒலிம்பிக் சாசனம், சர்வதேச கூட்டமைப்புகளின் சட்டங்களுக்கு ஒத்துப் போதல், சிறந்த நிர்வாகம், ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளைக் கடைபிடித்தல் மற்றும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான கொள்கைகளை பின்பற்றுவதை இது உறுதி செய்யும்.
சர்வதேச உறவுகள் தொடர்பாக உரிய நிபுணர்களுடன் 30 நாட்களுக்குள் குழுவை அமைத்தும், விளையாட்டுகளில் மேக் இன் இந்தியா தொடர்பான குழுவை 60 நாட்களுக்குள் அமைத்தும் அது குறித்த தகவல்களை அமைச்சகத்திற்கு அளிக்குமாறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214019®=3&lang=1
***
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2214077)
आगंतुक पटल : 11