குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பொங்கல், லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 12 JAN 2026 7:33PM by PIB Chennai

ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் நாடு முழுவதும் பரவலாக கொண்டாடடும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் மாக் பிஹு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பண்டிகைகள், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. நமது துடிப்பான மற்றும் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தை அவை பிரதிபலிக்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக அயராது உழைக்கும் நமது விவசாயிகளின் கடின உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் தருணமாக இந்தப் பண்டிகைகள் அமைகின்றன. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகளின் வாயிலாக, இயற்கை அன்னைக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

இந்த மகத்தான தருணத்தில், நமது சமூகத்தில் அன்பு மற்றும் ஒற்றுமை உணர்வு மேலும் வலுப்பெறவும், வளமான தேசத்தைக் கட்டமைப்பதில் நாம் ஒற்றுமையாகப் பாடுபடவும் விழைகிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213900&reg=3&lang=1

(Release ID: 2213900)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2213943) आगंतुक पटल : 86
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam