மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமரின் இளையோர் 3.O திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடன் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாடினார்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 9:17AM by PIB Chennai
பிரதமரின் இளையோர் 3.0-ன் (பிரதமரின் இளையோர் எழுத்தாளர்கள் வழிகாட்டுதல் திட்டம்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 இளையோர் எழுத்தாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று பிரதமர் அருங்காட்சியத்தில் உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, 6 மாத வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ள உள்ள கையெழுத்து பிரதிகள் குறித்த விரிவான கருத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய எழுத்தாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய இளைஞர்கள் அறிவு சார்ந்து படிக்கவும், எழுதவும் உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த வழிகாட்டுதல் காலத்தை சிறந்த புத்தகங்களை படைப்பதற்கு பயன்படுத்துமாறு ஊக்குவித்தார்.
ஆராய்ச்சி வளங்களை அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தேசிய புத்தக அறக்கட்டளை மூலம், நேரடி மற்றும் மின்னணு வளங்களை எளிதாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ முன்முயற்சியின் கீழ் எழுத்தாளர்களுக்கு வளங்களை அணுகும் வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் கையெழுத்துப் பிரதிகளை மேம்படுத்துவதற்காக, அப்பிராந்தியங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213531®=3&lang=1
TV/IR/LDN/PD
(रिलीज़ आईडी: 2213672)
आगंतुक पटल : 13