பிரதமர் அலுவலகம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 10:13AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சுவாமி விவேகானந்தரின் ஆளுமையும், பணிகளும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமிக்க நிலைப்பாட்டிற்குத் தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த புனிதமான தினம், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வலிமையையும், புதிய தன்னம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வலிமைமிக்க ஆதாரமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில், அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலிகள். அவரது ஆளுமையும், பணிகளும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்காகானப் பயணத்தில், தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளிப்பதாக உள்ளன. தேசிய இளையோர் தினத்தின் இந்த தெய்வீகத் தருணம், நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக, இளைஞர்களுக்கு புதிய வலிமையையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்."
***
(Release ID: 2213539)
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2213625)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam