தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பாண்டு பிரசார் பாரதி அமைப்பின் சீர்திருத்த ஆண்டாக இருக்கும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டிடி தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் படைப்பாளர்களுக்கான தளம் அவர்களுக்கான பிரத்யேக வாய்ப்பு வழங்கும் தளமாக அமையும் – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 09 JAN 2026 4:14PM by PIB Chennai

டிஜிட்டல் தளங்களில் படைப்பாளர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பிரசார் பாரதி அமைப்பின் கீழ் இயங்கி வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் படைப்பாளர்களுக்கான ஒரு பிரத்யேக தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் பிரசார் பாரதியிலும் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

தகவல்  ஒலிபரப்பு அமைச்சகத்தின் முழுமையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி போன்ற நிறுவனங்களைத் தொழில்துறையில் பங்கேற்கச் செய்வதுடன் புதிய தலைமுறை படைப்பாளர்களின் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும் என்று கூறினார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேவ்ஸ் தளம் படைப்பாளர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், டிடி தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் படைப்பாளர்களுக்கான தளம், அவர்களுக்கான பிரத்யேக வாய்ப்பு வழங்கும் தளமாக அமையும்  என்று கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள சிறு நகரங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த படைப்பாளர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தூர்தர்ஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரத்யேகத் தளம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாக அமையும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு மொழிகள், பிராந்தியங்களைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான தளமாக இது அமையும் என்று டாக்டர் எல் முருகன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212873&reg=3&lang=1

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2213010) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam