குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான வலிமையைப் பெற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அவசியம்-குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 3:07PM by PIB Chennai
நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை வழங்க உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் அவசியம் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதில்லை என்றும் மாறாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் எதிர்காலத்திற்குத் தேவையான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்குமான உத்திசார் நடவடிக்கை இது என்று எடுத்துரைத்தார்.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அதன் நிலைத்தன்மை, நாட்டின் நாகரீக பண்புகளில் வலுவாக வேரூன்றி உள்ளது என்று அவர் கூறினார்.
மனித செயல்பாட்டுக்கும் இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தைப் பராமரிப்பதிலும், பாரம்பரிய நீர்ப்பாதுகாப்பு அமைப்புகள், நிலையான வேளாண் நடைமுறைகள், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் நமது நெறிமுறை சார்ந்த செயல்பாடுகளில் இவை பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் தெரிவித்தார்.
வரும் 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றுவதற்கான இலக்குகளை எட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212832®=3&lang=1
----
TV/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212966)
आगंतुक पटल : 17