தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
படைப்பாளிகளுக்கு வருடாந்தர திறன் கட்டமைப்பு இணையவழிக் கருத்தரங்கு நிகழ்வை வேவ்ஸ் சந்தை நடத்துகிறது
प्रविष्टि तिथि:
08 JAN 2026 4:40PM
|
Location:
PIB Chennai
படைப்புத்துறையில் உலகளாவிய சந்தை அணுகல் மற்றும் அறிவுசார் சொத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகளை வேவ்ஸ் சந்தை 2026 ஜனவரியில் நடத்தவுள்ளது.
2026 ஜனவரி 15 அன்று நடைபெறும் திரைப்படம் சார்ந்த, சர்வதேச சந்தைக்கு இந்தியாவை கொண்டு செல்லுதல் என்ற கருப்பொருள் கொண்ட அமர்வுக்கு அகாடமி விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தலைமை வகிப்பார்.
இதைத்தொடர்ந்து 2026 ஜனவரி 22 அன்று டிஜிட்டல் இசை உலகில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கு நடைபெறும். ஏஐ மூலம் இயக்கப்படும் இசை உரிம தலமான ஹுப்பர் நிறுவனத்தின் நிறுவனரான கவ்ரவ் தகான்கர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார்.
திரைப்படம், விளையாட்டு, அனிமேஷன் போன்றவை குறித்து தொடர்ச்சியாக இணையவழி அமர்வுகளை வேவ்ஸ் சந்தை 2026 பிப்ரவரியில் நடத்தவுள்ளது. இதேபோல், மார்ச் 2026-ல் முக்கியமான சந்தை மற்றும் வளர்ச்சி பொருண்மைகளில் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212471®=3&lang=1
****
TV/SMB/SH
रिलीज़ आईडी:
2212591
| Visitor Counter:
9