பிரதமர் அலுவலகம்
சோம்நாத் சுயமரியாதை திருவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
08 JAN 2026 9:50AM by PIB Chennai
சோம்நாத் சுயமரியாதை திருவிழா தொடங்குவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் மனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்தால் அழியாத நாகரீக உணர்வை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சோம்நாத் ஆலயம் முதன் முறையாக தாக்குதலுக்கு உள்ளானது என்று மோடி தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்த நூற்றாண்டுகளிலும் மீண்டும் தாக்குதல் நிகழ்ந்த போதிலும் பக்தர்களின் நம்பிக்கை, பாரதத்தின் நாகரீக உறுதிப்பாடு ஆகியவை சோம்நாத் ஆலயம் மீண்டும் புனரமைக்கப்படுவதை உறுதி செய்ததாகக் கூறினார்.” சோம்நாத் சுயமரியாதை திருவிழா என்பது தங்கள் கொள்கைகள் மற்றும் அம்சங்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத பாரதத்தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவு கூரும் விழா என்று அவர் குறிப்பிட்டார். சவால்மிக்க காலங்கள் இருந்தபோதிலும் அவர்களுடைய உறுதி அசைக்க முடியாதததாகவும் நமது அம்சங்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு இணையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
சோம்நாத் ஆலயத்திற்கு தாம் முன்னதாக மேற்கொண்ட பயணம் குறித்த காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார். மக்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 1951-ம் ஆண்டு அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மீண்டும் கட்டப்பட்டு திறக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2001 அக்டோபர் 31 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இக்கோவிலின் மறுசீரமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல், கேன என் முன்ஷி உள்ளிட்டோரின் முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212293®=3&lang=1
***
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2212493)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam