சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் கழிவுகளை மதிப்பு வாய்ந்த தேசிய வளங்களாக மாற்ற முடியும் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி

प्रविष्टि तिथि: 07 JAN 2026 3:23PM by PIB Chennai

வேளாண் கழிவுகளை எவ்வாறு மதிப்பு வாய்ந்த தேசிய வளங்களாக மாற்ற முடியும் என்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி  விளக்கியுள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையையொட்டி வேளாண் கழிவுகளால் உற்பத்தி செய்யப்படும் தார் மாற்றத்தக்க நடவடிக்கை என்று கூறினார். வேளாண் கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுவைக் குறைத்து சுழற்சிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சுமார் 15 சதவீதம் அளவிற்கு வேளாண் கழிவுகளைக் கலப்பதன் மூலம் சுமார் ரூ.4,500 கோடி அளவிற்கு வெளிநாட்டு செலாவணியை இந்தியா சேமிக்க முடியும் என்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைச்  சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சிஎஸ்ஐஆர்-ன் தொழில்நுட்ப மாற்ற நிகழ்ச்சியில், வேளாண் கழிவுகளிலிருந்து சாலை: பைரோலைசிஸ் வாயிலாக வேளாண் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தார் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். உலகில் வர்த்தக ரீதியாக வேளாண்  கழிவுகளிலிருந்து தார் உற்பத்தி செய்யும் முதலாவது நாடாக இந்தியா திகழ்வதன் மூலம் தற்போது இது நாட்டின் சாலை உள்கட்டமைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212083&reg=3&lang=1

***

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2212134) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Telugu , Malayalam