பிரதமர் அலுவலகம்
நற்பண்பு, குணம், அறிவு மற்றும் வளம் போன்ற காலத்தால் அழியாத விழுமியங்களை உணர்த்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 8:57AM by PIB Chennai
இந்திய பாரம்பரியத்தின் நீடித்த ஞானம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நாட்டின் வாழ்வியல் மற்றும் தனிமனித நடத்தையை தொடர்ந்து வழிநடத்தும் விழுமியங்கள் குறித்து அவர் வலியுறுத்தினார்.
உண்மையான அழகு என்பது நற்பண்புகளால் அலங்கரிக்கப்படுகிறது என்றும், பாரம்பரியம், குணநலத்தால் மேன்மையடைகிறது என்றும், ஞானம் வெற்றியின் மூலம் அதன் மதிப்பை பெறுகிறது என்றும், செல்வம் பொறுப்புணர்வுடன் கூடிய பயன்பாட்டின் மூலம் மதிப்பு பெறுகிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இத்தகைய விழுமியங்கள் காலத்தால் அழியாதது மட்டுமின்றி, சமூகத்தில் வலுவான தொடர்பு கொண்டுள்ளவை என்றும், நாட்டின் வளர்ச்சி, பொறுப்புணர்வு, நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு அவை வழிகாட்டியாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“गुणो भूषयते रूपं शीलं भूषयते कुलम्।
सिद्धिर्भूषयते विद्यां भोगो भूषयते धनम्॥”
***
(Release ID: 2211955)
AD/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2212037)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam