மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சுதந்திர தின உரைகள் இடம்பெற்ற உருது மொழி புத்தகத்தை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 05 JAN 2026 5:42PM by PIB Chennai

மத்திய கல்வியமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் “குத்பத்-ஏ-மோடி: லால் கிலா கி ஃபசில் சே” என்ற உருது புத்தகத்தை இன்று வெளியிட்டார். இப்புத்தகம் பிரதமர் திரு நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையின் தொகுப்பாகும்.

நாடு முழுவதும் உருது மொழியை மேம்படுத்தவும்பாதுகாக்கவும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புதுதில்லியில் உள்ள தேசிய உருது மொழி மேம்பாட்டு குழுமம் இப்புத்தகத்தை உருது மொழியில் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், 'குத்பத்-ஏ-மோடிஎன்ற புத்தகம் உருது மொழியில் வெளியிடப்பட்டது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இது மொழிசார் உள்ளடக்கத்தை நோக்கிய ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கை என்று அவர் கூறினார்.

பிரதமரின் உரைகளில்,  கடைக்கோடி மக்களையும் மேம்படுத்துதல்ஏழைகளின் நலன்தூய்மை இந்தியாதேசிய ஒற்றுமை, 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள் போன்ற முன்முயற்சிகள் வலியுறுத்தப்பட்டுபுதிய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

இத்தகைய வெளியீடுகள்பிரதமரின் கருத்துக்கள்வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நேரடியாக மக்களை இணைக்க ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகச் செயல்படுகின்றன என்றும்இது பரந்த பொது ஈடுபாடுதகவலறிந்த விவாதங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த புத்தகம் நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் இடம்பெற்றுமாணவர்கள்அறிஞர்கள் மற்றும் வாசகர்களை வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை குறித்த விரிவான உரையாடலில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211563&reg=3&lang=1

***

TV/IR/LDN/SE


(रिलीज़ आईडी: 2211601) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu