பிரதமர் அலுவலகம்
சோமநாத்தின் 1000 ஆண்டுகால மீள்தன்மைக்கு பிரதமர் புகழாரம்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 8:59AM by PIB Chennai
கி.பி. 1026-ல் சோமநாதர் ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் 1000 ஆண்டு கால வரலாற்றை நினைவு கூரும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஒரு தலையங்கக் கட்டுரையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உள்ளான போதிலும், சோமநாதர் ஆலயம் இந்தியாவின் நீடித்த உணர்வின் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். சோமநாதர் ஆலயத்தின் கதை என்பது ஒரு கோவிலைப் பற்றியது மட்டுமல்ல, தேசத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைப் பாதுகாத்த பாரத அன்னையின் எண்ணற்ற பிள்ளைகளின் அசைக்க முடியாத துணிச்சலைப் பற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில், திரு மோடி கூறியிருப்பதாவது;
“ஜெய் சோம்நாத்!
2026-ம் ஆண்டு, சோமநாதர் ஆலயத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. அதன் பிறகு மீண்டும் மீண்டும் பல்வேறு தாக்குதல்கள் நடந்தபோதிலும், சோமநாதர் ஆலயம் கம்பீரமாக நிற்கிறது! ஏனென்றால், சோமநாதர் ஆலயத்தின் கதை என்பது நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைப் பாதுகாத்த பாரத அன்னையின் எண்ணற்ற பிள்ளைகளின் அசைக்க முடியாத துணிச்சலைப் பற்றியதாகும்.
இந்த விஷயத்தில் எனது தலையங்கக் கட்டுரை இங்கே.
#SomnathSwabhimanParv
https://www.narendramodi.in/somnath-swabhiman-parv-a-1000-years-of-unbroken-faith-1026-2026”
***
(Release ID: 2211330)
AD/PKV/KR
(रिलीज़ आईडी: 2211443)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam