ரெயில்வே அமைச்சகம்
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
03 JAN 2026 8:02PM by PIB Chennai
மத்திய ரயில்வே, தகவல் & ஒலிபரப்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், புதுதில்லி ரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை ஆய்வு செய்தார்.
இருக்கை மற்றும் படுக்கை வசதிகள், நவீன உட்புறங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட படுக்கை வசதி பெட்டிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலின் வசதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், கவச் பாதுகாப்பு அமைப்புமுறை, தீ விபத்தைத் தடுப்பதற்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள், கிருமிநாசினி தொழில்நுட்பம் மற்றும் அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு காமிரா போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதி மற்றும் தூய்மையில் இந்திய ரயில்வேயின் கவனத்தை பிரதிபலிக்கும் வகையில், மேம்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும், கழிப்பறைகளில் புதுமையான வடிவமைப்பு கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நீண்ட தூர இரவு நேர ரயில் பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், அசாமின் குவஹாத்திக்கும் மேற்கு வங்கத்தின் ஹவுராவிற்கும் இடையே இயக்கப்படும். ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், ரயிலின் தொழில்நுட்ப அம்சங்களை மதிப்பாய்வு செய்து, வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் முழுமையாகத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211160®=3&lang=1
***
AD/BR/RK
(रिलीज़ आईडी: 2211256)
आगंतुक पटल : 19