தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
படைப்பாற்றல் போட்டிகளின் வெற்றியாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
03 JAN 2026 12:42PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், 'மாறிவரும் இந்தியாவில் எனது அனுபவங்கள் ' பிரச்சாரத்தின் கீழ் நடத்தப்பட்ட நான்கு படைப்பாற்றல் போட்டிகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் மைகவ் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மாற்றத்தைப் பிரதிபலிக்கும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் படைப்பு வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
'வளர்ச்சியடைந்த பாரதம் @2047' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு வயது மற்றும் பின்னணிகளைக் கொண்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பரந்த அளவிலான படைப்பு வடிவங்கள் மூலம், பங்கேற்பாளர்கள் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றத்தக்க ஆளுகை மற்றும் விரைவான வளர்ச்சியின் தாக்கத்தை எடுத்துரைத்தனர். அடித்தட்டு மக்களின் பங்கேற்பு முதல் படைப்பாற்றல் வெளிப்பாடுகள் வரை, இந்த முயற்சி ஒவ்வொரு இந்தியரையும் ஈடுபடுத்தியதுடன், அவர்களை ஊக்கப்படுத்தியது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘மாறிவரும் இந்தியாவில் எனது அனுபவங்கள்’ பிரச்சாரத்தின் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் ‘வளர்ச்சியடைந்த பாரதக்’ கதைகளை விவரிப்பதில் உற்சாகமான பங்களிப்பிற்காக வாழ்த்துகிறது. இந்த மாற்றகரமான பயணத்தை நோக்கி தங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை தொடருமாறு அனைத்து வெற்றியாளர்களையும் அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211026®=3&lang=1
****
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2211135)
आगंतुक पटल : 19