பிரதமர் அலுவலகம்
சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
03 JAN 2026 8:07AM by PIB Chennai
இன்று சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முன்னோடியான சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்துள்ளார்.
சாவித்திரிபாய் ஃபுலே சமத்துவம், நீதி மற்றும் கருணை ஆகிய கொள்கைகளில் உறுதியுடன் இருந்தார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கல்விதான் சமூக மாற்றத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி என்று அவர் உறுதியாக நம்பினார், மேலும் அறிவு மற்றும் கற்றல் மூலம் வாழ்க்கையை மாற்றுவதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைத்துள்ள திரு நரேந்திர மோடி, பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை மக்களைப் பராமரிப்பதில் அவரது பணி, சேவை மற்றும் மனிதநேயத்திற்கு ஒரு உத்வேகம் அளிக்கும் உதாரணமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்குவதில் தேசத்தின் முயற்சிகளுக்கு அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து வழிகாட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில், சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த ஒரு முன்னோடி தலைவரை நாம் நினைவுகூர்கிறோம். அவர் சமத்துவம், நீதி மற்றும் கருணை ஆகிய கொள்கைகளில் உறுதியுடன் இருந்தார். கல்விதான் சமூக மாற்றத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி என்று அவர் நம்பினார், மேலும் அறிவு மற்றும் கற்றல் மூலம் வாழ்க்கையை மாற்றுவதில் கவனம் செலுத்தினார். பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பராமரிப்பதில் அவரது பணியும் குறிப்பிடத்தக்கது.”
****
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2211125)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada