பிரதமர் அலுவலகம்
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 JAN 2026 8:16AM by PIB Chennai
இந்தியாவின் மிகவும் வீரமிக்க போர் வீராங்கனைகளில் ஒருவராகவும், துணிச்சலையும், போர்த்தந்திர திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்திப் புகழ்பெற்றவருமான ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ராணி வேலு நாச்சியார் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார் என்றும், இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையை வலியுறுத்தினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டிள்ளார். நல்லாட்சி, கலாச்சாரப் பெருமை ஆகியவற்றுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தேசத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
அவரது தியாகமும், தொலைநோக்குத் தலைமையும் வரும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும், இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் துணிச்சல், தேசபக்தி ஆகியவற்றுக்குக் கலங்கரை விளக்கமாக அவை திகழும் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவிற்கு கூறியிருப்பதாவது:
“ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்..”
(Release ID: 2210996)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2211124)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam