பிரதமர் அலுவலகம்
ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் பிப்ரவா நினைவுச்சின்னங்களைக் காண பொது மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
பகவான் புத்தரின் உன்னத சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப பிப்ரவா நினைவுச்சின்ன கண்காட்சி அமைந்துள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
02 JAN 2026 6:16PM by PIB Chennai
"ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள்" என்ற தலைப்பில் புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரம்மாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 3 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.
கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்தின் மீது ஆர்வமுள்ள அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட்டு பிப்ரவாவின் புனித பாரம்பரியத்தை அனுபவிக்குமாறு பிரதமர் இன்று கேட்டுக் கொண்டார்.
ஒரு நூற்றாண்டுக்குப் பின் திருப்பி கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை இந்தக் கண்காட்சி ஒன்றிணைக்கிறது என்றும், புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பிப்ரவாவிலிருந்து வந்த உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொன்மையான பொருட்களும் கொண்டுவரப்படுகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெவ்வேறு பதிவுகளில், திரு மோடி கூறியதாவது:
“நாளை, ஜனவரி 3-ம் தேதி, வரலாறு, கலாச்சாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.
காலை 11 மணிக்கு, பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரம்மாண்டமான சர்வதேச கண்காட்சியான, 'ஒளி & தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள்', தில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் திறந்து வைக்கப்படும்.
இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்கள்:
ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிப்ரவா நினைவுச்சின்னங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பிப்ரவாவிலிருந்து கொண்டு வரப்படும் உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள்.”
"பகவான் புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் இந்தக் கண்காட்சி ஒத்துப்போகிறது. இது நமது இளைஞர்களுக்கும், நமது வளமான கலாச்சாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்தும் ஒரு முயற்சியாகும். இந்த நினைவுச்சின்னங்களை திருப்பி அனுப்புவதற்கு பாடுபட்ட அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்."
"தில்லியில் நடைபெற்ற புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரம்மாண்டமான சர்வதேச கண்காட்சியின் படங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்தின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் இந்தக் கண்காட்சிக்கு வருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்."
(Release ID: 2210876)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2210987)
आगंतुक पटल : 6