பாதுகாப்பு அமைச்சகம்
என்சிசி குடியரசு தின முகாம் 2026 சர்வமத பிரார்த்தனையுடன் தொடங்கியது
प्रविष्टि तिथि:
30 DEC 2025 12:56PM by PIB Chennai
தேசிய மாணவர் படை (என்சிசி) குடியரசு தின முகாம் 2026 தில்லி கண்டோண்மெண்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 2025, டிசம்பர் 30 அன்று சர்வமத பிரார்த்தனையுடன் தொடங்கியது. ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இம்முகாமில் சிறந்த என்சிசி மாணவர் போட்டி, சிறிய ரக ஆயுதங்களை கையாளுதல், கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பின் போது இடம்பெறும் குழு போன்ற நிகழ்வுகளும், போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 898 சிறுமியர் உட்பட 2406 என்சிசி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளையோர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் 25 நட்பு நாடுகளை சேர்ந்த மாணவர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209714®=3&lang=1
***
TV/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2209785)
आगंतुक पटल : 10