பிரதமர் அலுவலகம்
புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
27 DEC 2025 10:44AM by PIB Chennai
புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் தைரியம், கருணை மற்றும் தியாகத்தின் உருவமாகத் திகழ்கிறார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் போதனைகளும் உண்மை, நீதி, நேர்மைக்காக நிற்கவும் மனித மாண்பைப் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் தொலைநோக்குப் பார்வை பல தலைமுறைகளை சேவை மற்றும் தன்னலமற்ற கடமையை நோக்கித் தொடர்ந்து வழிநடத்துகிறது, என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி, அவருக்கு நாம் மரியாதையுடன் தலைவணங்குகிறோம். அவர் தைரியம், கருணை மற்றும் தியாகத்தின் உருவமாகத் திகழ்கிறார். அவரது வாழ்க்கையும் போதனைகளும் உண்மை, நீதி, நேர்மைக்காக நிற்கவும் மனித மாண்பைப் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் தொலைநோக்குப் பார்வை பல தலைமுறைகளை சேவை மற்றும் தன்னலமற்ற கடமையை நோக்கித் தொடர்ந்து வழிநடத்துகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் பட்னா சாஹிப்பிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இங்கே உள்ளன. அங்கு நான் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மற்றும் மாதா சாஹிப் கவுரின் புனித ஜோரே சாஹிப்பையும் தரிசித்தேன்.
***
SS/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2209055)
வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam