ஆயுஷ்
2025 ஆம் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை –ஆயுஷ் அமைச்சகம்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 10:34AM by PIB Chennai
2025 ஆம் ஆண்டு முடிவடையும் வேளையில், மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரிய சுகாதாரப் பாதையில் இந்தியாவின் பயணத்தில் இந்த ஆண்டை ஒரு திருப்புமுனையாக ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிடுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முன்முயற்சிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு விரிவாக்கம் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய ஒத்துழைப்புகள் மற்றும் பெருமளவிலான பொது சுகாதாரப் பிரச்சாரம் வரை, இந்த ஆண்டு ஆயுஷ் அமைப்புகள் பிரதான நீரோட்டத்திற்கு உறுதியாக நகர்வதைக் கண்டது. வளர்ச்சியடைந்த பாரதம் @2047 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்தது—ஆராய்ச்சி, ஒழுங்குமுறை, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச நம்பகத்தன்மையை வலுப்படுத்தியது—அதே நேரத்தில் முழுமையான சுகாதாரப் பலன்கள் நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரோஹினியில் உள்ள புதிய மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவன கட்டிடத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 2.92 ஏக்கர் பரப்பளவில், ரூ 187 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த அதிநவீன வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஆராய்ச்சி மருத்துவமனை, சிறப்பு மருத்துவ மையங்கள், மேம்பட்ட ஆய்வகங்கள், பயிற்சி வசதிகள் ஆகியவை இடம்பெறும். பல தசாப்தங்களாக வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்த இந்த நிறுவனத்திற்கு இது ஒரு மாற்றியமைக்கும் திருப்புமுனை விரிவாக்கமாகும்.
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, யுனானி தினத்தை முன்னிட்டு மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி மன்றம் ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து, ஹக்கீம் அஜ்மல் கானுக்கு அஞ்சலி செலுத்தி, பொது சுகாதாரத்திற்கு இந்த மன்றம் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், ஆயுஷ் மிகவும் நம்பகமான மற்றும் பரவலாக அணுகப்பட்ட சுகாதாரத் தூண்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு, நடமாடும் சுகாதாரப் பிரிவுகள், ஆரோக்கிய மையங்கள் மற்றும் யோகா அமர்வுகள் மூலம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அதன் சேவைகளால் பயனடைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இந்தோனேசியா பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை எட்டப்பட்டது. ஜனவரி 25, 2025 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் முன்னிலையில், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் இடையே பாரம்பரிய மருத்துவ தர உத்தரவாதம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பாரம்பரிய மருத்துவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரவலை மேம்படுத்துவதற்காக ஒரு சிறப்பு மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.
இந்த ஆண்டில் ஆயுஷ் அமைச்சகம் ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208661®=3&lang=1
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2209013)
आगंतुक पटल : 29