உள்துறை அமைச்சகம்
வீர பாலகர் தினத்தையொட்டி குரு கோவிந்த் சிங் , மாதா குஜ்ரி மற்றும் வீரம்மிக்க சாஹிப்சாதாக்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி
प्रविष्टि तिथि:
26 DEC 2025 11:20AM by PIB Chennai
வீர பாலகர் தினத்தையொட்டி குரு கோவிந்த் சிங், மாதா குஜ்ரி மற்றும் வீரம்மிக்க சாஹிப்சாதாக்களின் தியாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், நம்பிக்கை மற்றும் நாட்டைக் காப்பதற்காக குரு கோவிந்த் சிங்கின் வீரம்மிக்க மகன்கள் மிக இளம் வயதிலேயே செய்த தியாகங்கள் வரலாற்றில் ஒரு அரிய எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார். மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கான விதைகளை விதைத்த, மாதா குஜ்ரி, குரு கோவிந்த் சிங் ஆகியோரால் சாஹிப்சாதாக்களுக்குள் புகுத்தப்பட்ட விழுமியங்களை, கொடூரமான ஒடுக்குமுறையாளர்களின் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளாலும் அசைக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். நான்கு சாஹிப்சாதாக்களின் தியாகக் கதை ஒவ்வொரு தலைமுறையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி 'வீர பாலகர் தினம்' அனுசரிப்பைத் தொடங்கினார் என்று திரு ஷா கூறியுள்ளார்.
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2209009)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam