குடியரசுத் தலைவர் செயலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 DEC 2025 5:12PM by PIB Chennai
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“புனிதமான கிறிஸ்துமஸ் திருநாளில் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வரும் பண்டிகையான கிறிஸ்துமஸ் அன்பு, இரக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. மனிதகுலத்தின் நலனுக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை இது நினைவூட்டுகிறது. இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், சேவை ஆகியவற்றை வலுப்படுத்த நமக்கு ஊக்கமளிக்கிறது.
இயேசு கிறிஸ்து காட்டிய பாதையைப் பின்பற்றி, கருணையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை கட்டமைக்க நாம் உறுதியேற்போம்.
----
TV/PLM/KPG/SE
(रिलीज़ आईडी: 2208243)
आगंतुक पटल : 15