குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய அறிவியல் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்
प्रविष्टि तिथि:
23 DEC 2025 6:25PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகளை இன்று (23 டிசம்பர் 2025) வழங்கினார். இந்த விருது வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள கந்தாந்த்ரா மண்டபத்தில் நடைபெற்றது.
அறிவியல் துறையில் சிறப்பான சேவையாற்றிய விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளில் 24 விருதுகள் வழங்கப்பட்டது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் தனிநபராகவும் குழுவாகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர் தாளப்பில் பிரதீப்புக்கு தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையிலும், பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வாலுக்கு கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையிலும் மற்றும் பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசத்திற்கு வேதியியல் துறையிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207836®=3&lang=1
***
AD/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2207917)
आगंतुक पटल : 14